Thread:
வரலாற்றில் இன்று -இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இந்தியாவின் பிரம்மாண்டமான நிதி நிறுவனம் இன்று 65வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. 246 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து நாட்டுடைமையாக்கி 1956 செப்டம்பர் 1ஆம் நாள் உருவாக்கப்பட்டு கடந்த 64 ஆண்டுகளாக தேச

நிர்மாணப் பணிகளுக்கு LICன் பெரும் பங்களிப்பு மகத்தானது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் துவங்கி,13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டு வரை LICன் மொத்த பங்களிப்பு ரூ34 லட்சம் கோடிகளை கடந்துள்ளது. அரசு நிறுவனமான இதன் வெற்றி,ஆயுள் காப்பீட்டுத் தொழிலுக்கு மட்டுமின்றி எல்லாத்
தொழில் நிறுவனங்களுக்குமே ஓர் சீரிய முன்னுதாரணம் ஆகும்.
1956ல் 5கோடி அரசு முதலீட்டோடு துவங்கிய LIC, பின்னர் சட்டத் தேவைகளுக்காக ரூ100 கோடிகளாக அதன் மூலதனம் உயர்த்தப்பட்டாலும், எந்தவொரு நேரத்திலும் அரசிடம் இருந்து எல்.ஐ.சி கூடுதல் மூலதனத்தை எதிர்பார்த்ததே கிடையாது. அவ்வளவு

சிறிய மூலதன தளத்தில் LICன் சொத்து மதிப்பு 32லட்சம் கோடிகளாக இன்றைய நாளில் வளர்ந்துள்ளது. இது LICன் பளிச்சிடும் சாதனையாகும்.
இம் மாபெரும் தேசத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் LICயின் சிறகுகள் விரிந்துள்ளன.அதன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகவே இல்லை.உலகம்
இம் மாபெரும் தேசத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் LICயின் சிறகுகள் விரிந்துள்ளன.அதன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகவே இல்லை.உலகம்
முழுவதுமுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 42கோடி பாலிசிகளோடு LIC எட்டியுள்ள உயரம் ஒப்பிட இயலாத ஒன்று.
வேகமாக வளர்கிற நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு "உள் நாட்டு சேமிப்பு" திரட்டலே மிகச் சிறந்த வழிமுறை என்பதை LIC நிரூபித்துள்ளது. இந்திய ரயில்வே நிதித் தேவைகளுக்காக
வேகமாக வளர்கிற நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு "உள் நாட்டு சேமிப்பு" திரட்டலே மிகச் சிறந்த வழிமுறை என்பதை LIC நிரூபித்துள்ளது. இந்திய ரயில்வே நிதித் தேவைகளுக்காக
LICயை அணுகிய போது 1.5 லட்சம் கோடிகளை,அதாவது ஆண்டுக்கு 30000 கோடிகள் வீதம் 5 ஆண்டுகளுக்கு,தருவதாக உடனே உறுதி தந்தது. அது போன்று நெடுஞ்சாலை,குடி நீர் திட்டங்கள்,போக்குவரத்து, பாலங்கள்,துறைமுக மேம்பாடு, நீர்ப்பாசனம்,மின்சாரம் என ஆதாரத் தொழில்களுக்கு பெரும் நிதியாதாரங்களை தந்துள்ளது.
இவ்வளவு சீரும் சிறப்போடும் பணியாற்றிவரும் -இந்திய பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் நம்பிக்கை தூணாக விளங்கும் LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்று அதனை ஒழித்துக்கட்ட வழக்கம்போல மோடி அரசு முடிவு செய்துள்ளது.
#HBD_LIC
#SavePublicSector
#HBD_LIC
#SavePublicSector
Read on Twitter