ஏ நெகடிவ் ரத்தம் தேவைனு அந்த வகை ரத்தம் இருக்க தம்பி ஒருத்தன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் கூட்டிட்டு வர்ற வேலை குடுத்தாய்ங்க.. வெள்ளிக்கிழமை எல்லாரும் தொழுகை வைக்கணும்னு என்ன அனுப்புனாய்ங்க.. வண்டில ஏத்தி பெட்ரோல் போட நிறுத்துறப்ப சாப்டியாடான்னு கேட்டா சாப்டலனான்.. 1/n
ஏன்டானு கேட்டா என் ஆளு கூட சண்டன்னான்.. எங்கப்பன் கோவணத்த அவுத்த நேரம் என்னவா இருக்கும்னு யோசிச்சுட்டே ஒரு வொண்டர்கேக் வாங்கி குடுத்து பொச்ச சாத்திட்டு தின்னுட்டு வா பொலம்ப மட்டும் செய்யாதனு 18km தாண்டி ஹாஸ்பிடல் வந்தாச்சு.. 2/n
எங்கள ரிசீவ் பண்ணவேண்டிய ஆள் ஹாஸ்பிடல் வெளியவே தூக்குவாளியோட நின்னுருந்தான்.. சரி நேரமும் save ஆகும் இதெல்லாம் மனுஷாளுக்கு மனுஷாள் ஒரு ஒத்தாசதானேன்னு குடுங்க நா கடைக்கு போறே இவன கூட்டிட்டு மேல போங்கனுட்டு என்ன வாங்கணும்னு கேட்டே.. 3/n
அஞ்சு பேர் குடிக்கிறமாதிரி காபி, அஞ்சு பிளாஷ்டிக் கப், பிரிட்டானியா ரஸ்க், காபில ஜீனி மட்டும் போட சொல்லுங்க ஆத்திட வேணாம்னுருக்கான்.. ரோட்டுல போன ஸ்கூட்டிய பாத்துட்டே சரி சரினுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டே.. 4/n
ஜீனி மேட்டர் சென்சிட்டிவான டாபிக் மாதிரி இருந்ததால அதமட்டும் யாவகம் வச்சுக்கிட்டு கடைல போனதும் அஞ்சு பேர் குடிக்கிற மாதிரி காபி ஜீனி போடுங்க ஆனா ஆத்தக்கூடாதுன்னவும் அதெல்லாம் போய் மாஸ்டர்ட்ட சொல்லுன்னு காச புடுங்கிட்டு டோக்கன தூக்கி போட்டான் கல்லால இருந்தவன்.. 5/n
ரொம்ப சிரத்தையா காபிய வாங்கிட்டு வாளிய ஆட்டுனாக்கூட ஜீனி கரைஞ்சுரும்னு ஆட்டாம நடந்துவந்து ரஸ்க் பாக்கெட் கேட்டா பிரிட்டானியா இல்ல பால் ரஸ்க் பாக்கெட்தான் இருக்கு செம டேஸ்ட்டா இருக்கும்னான்.. 6/n
சம்பந்தப்பட்டவனுக்கு கால் பண்ணி இப்டிக்கு இப்டிங்கனு சொன்னா நானே கடைக்கு போயிருப்பே பாய் சரி வாங்கிட்டு வாங்கனு சலிப்பா ஃபோன வச்சுட்டான்.. வெள்ளைக்காரனுக மாதிரி நம்மளால சிறு சிறு இணக்கத்தோட வாழ்றதுன்றது முடியாத காரியம்லனு இத டைப் பண்ணிட்ருக்கே.. 7/n
இப்பவந்து என்ன பாய் அந்த காபி நாலு பேருக்கே பத்தலனு கடுப்பா கேக்குறான்.. கூட இருக்க பொண்ணு பர்தாக்குள்ள சிரிக்குது.. நா உதவ வந்தவன்டா வேலைக்கு வந்தவன் மாதிரி ட்ரீட் பண்றீங்க..
You can follow @thatisitis.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: