பெஸ்டி (பாய்/கிர்ள்) ஒரு பெரிய டாப்பிக்.. அதப் பத்தி எனக்கு தெரிஞ்ச வர என்னோட புரிதல வச்சும் என் ஃப்ரெண்டுக்கு நடந்தது வச்சும் சொல்லலாம்னு நினைக்கிறேன்.. சரி முதல்ல இந்த பெஸ்டி னா என்ன ? "பெஸ்ட் பிரெண்ட்" அதோட ஷார்ட் பார்ம் தான் பெஸ்டி அப்படின்னு இருந்துச்சு
அதுமட்டுமில்லாம பொண்ணு - பொண்ணு பெஸ்ட் பிரண்டா இருந்தா பெஸ்டினு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. ஆனா பையன் - பையன் க்ளோஸ் ஃப்ரண்டா இருக்கிறத பெஸ்டி னு சொல்ற வழக்கம் நாம ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் இல்லை.. நம்மளோட முக்கியமான பல சீக்கிரஸ்ட் தெரிஞ்சவங்கதான் நம்மளோட பெஸ்ட் பிரெண்ட்
அவங்களுக்கு நம்மள பத்தி நிறைய விஷயம் தெரியும் கிட்டத்தட்ட எல்லாமே தெரியும்..
ஓகே நாம பாய்ண்ட்டுக்கு வருவோம்.. பையன் - பொண்ணு நண்பர்களாய் இருக்கிறது அந்த காலத்துல இருந்தே இருந்தாலும் இந்த பெஸ்டிங்கிற வார்த்தை புழக்கம் சமீபகாலமாக ரொம்ப அதிகமா தெரியுது..
ஓகே நாம பாய்ண்ட்டுக்கு வருவோம்.. பையன் - பொண்ணு நண்பர்களாய் இருக்கிறது அந்த காலத்துல இருந்தே இருந்தாலும் இந்த பெஸ்டிங்கிற வார்த்தை புழக்கம் சமீபகாலமாக ரொம்ப அதிகமா தெரியுது..
பையன் - பொண்ணு நட்பா இருக்குறப்போ அந்த இடத்துல நிறைய ப்ளஸ் பாயிண்ட் இருக்கு ஒரு பொண்ணும் பொண்ணும் நட்பா இருக்கிறப்போ ஏதோ ஒரு இடத்தில கண்டிப்பா பொறாமை எட்டி பார்க்கும்.. அப்புறம் சொல்லவா வேணும்? இவள பத்தி அவ இன்னொரு கேங் கிட்ட போய் புறணி பேசுறது சண்டை போட்றது இப்படியே முடிஞ்சிடும்
ஆனா இதெல்லாம் ஒரு ஆண் பெண் நட்பு ல கண்டிப்பா இருக்காது ஏதோ ஒரு சூழ்நிலையில் பிடிக்காமல் சண்டை போட்டாலும் இவள பத்தி அவன் தப்பா பேசுவானானு பார்த்தா வாய்ப்புகள் ரொம்ப கம்மியா தான் இருக்கும்.. நட்புங்கிறது தேடிப்போய் அமைத்துக் கொள்வது இல்ல.. அதெல்லாம் தானா அமையும்..
ஆனா இப்போ இந்த பெஸ்டின்கிற வார்த்தைக்கே அர்த்தம் சுத்தமா மாறிப்போச்சு.. என்னதான் கிளோஸ் ஃப்ரண்ட்டா(பெஸ்டி) இருந்தாலும் அவரவர்க்கு ஒரு லிமிட்,பிரைவசி இருக்கு எல்லாத்துலயும் போய் தலையிட முடியாது..கூடாது .சிம்பிளா சொல்ல போனா பெஸ்டி = கள்ளக்காதல் அந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டாங்க..
இரண்டு காதலர்களுக்கு நடுவுல பெஸ்டியால சண்டை வருதுன்னா இங்க யாரு மேல தப்பு ? உங்க பிரைவசி நீங்க தான் பாத்துக்கணும்.. எல்லாத்தையும் கொண்டு போய் ஒருத்தன்கிட்ட ஒப்பிச்சா அவன் வந்து மூக்கு நுழைக்க தான் செய்வான்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤷" title="Person shrugging" aria-label="Emoji: Person shrugging">.. லவ்வர் இருக்குறப்போ பெஸ்டி வேணுமா வேண்டாமா அப்படிங்கறது உங்க இஷ்டம்.
இதே தான் கல்யாணம் ஆனவங்க வெஸ்டி வச்சுக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க இது கொஞ்சம் சிக்கலான டாபிக் தான் ஒன்னே ஒன்னு கேக்குறேன் கல்யாணம் ஆனா ஜடமா மாறிடனுமா.. க்ளோஸ் ஃப்ரண்ட் ஏன் இருக்கக் கூடாதா ?.. (லவ்வர்ஸ்குள்ள சொன்ன அதே விஷயம் தான் பிரைவசி லிமிட் ரொம்ப முக்கியம் )
இன்னொன்னு உங்களுக்கு பெஸ்டி இருந்தா எப்படி ஓகேவோ அதே மாதிரி உங்க துணைக்கும் பெஸ்டி இருந்தா ஓகேவா தானே இருக்கணும் ? இங்க எல்லாரும் பெஸ்டி ன்னா ஏன் தையா தக்கானு குதிக்கிறாங்கனா பாதி பேரோட லவ்வு பெஸ்டியாளதான் புட்டுகிட்டு போச்சு, போற நிலைமைல இருக்கு இது நிறைய பேருக்கு நடந்த உண்மை..
அப்புறம் நமக்கும் அப்படி ஒரு பெஸ்டி இல்லையே அப்படிங்ற கூட இருக்கலாம் எது எப்படியோ இது என்னோட opinion அவ்ளோதான் . உங்க opinion எப்டியோ எனக்கு தெரியாது
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤷" title="Person shrugging" aria-label="Emoji: Person shrugging">